ஏ.பி.டி.யின் போராட்டம் வீணானது! பெங்களூரு அணி மீண்டும் தோல்வி
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 6 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 7 ஆவது போட்டி இன்றிரவு 8.00 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கிடையிலும் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 187 ஓட்டங்களை குவித்தது.
188 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூரு அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக பார்தீவ் படேல் மற்றும் மொய்ன் அலி ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாடி வர 3.2 ஆவது ஓவரில் மொய்ன் அலி 13 ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அதனால் பெங்களூரு அணியின் முதல் விக்கெட் 27 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது.
தொடர்ந்து ஆடுகளம் நுழைந்த விராட் கோலியுடன் பார்தீவ் படேல் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வர பெங்களூரு அணி 5.1 ஓவரில் 50 ஓட்டங்களை கடந்தது. எனினும் 6 ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் பார்தீவ் படேல் 31 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து 3 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் வில்லியர்ஸின் இணைப்பாட்டம் பெங்களூரு அணிக்கு வலு சேர்த்தது.
ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 12 ஆவது ஓவரில் 109 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் விராட் கோலி 43 ஓட்டத்துடனும், வில்லியர்ஸ் 21 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தடி வந்தனர்.
இந் நிலையில் 13 ஆவது ஓவரின் நான்வாது பந்தில் விராட் கோலி 46 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் வெற்றி வாய்ப்பு மும்பை பக்கம் திரும்பியது. எனினும் ஆடுகளத்தில் வில்லியர்ஸ் ஆட்டமிழக்காதிருந்தது, பெங்களூரு ரசிர்களுக்கு நம்பிக்கையளித்தது.
விராட் கோலியின் வெளியேற்றத்தையடுத்து களமிறங்கிய சிம்ரன் ஹெட்மேயருடன் வில்லியர்ஸ் ஜேடி சேர்ந்து அதிரடி காட்ட பெங்களூரு அணி 15 ஓவர்களின் முடிவில் 127 ஓட்டங்களை குவித்தது.
16 ஆவது ஓவருக்காக மலிங்க பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரின் இறுதி இரு பந்துகளில் வில்லியர்ஸ் 2 ஆறு ஓட்டங்களை அடுத்தடுத்து விளாசித் தள்ள, 16 ஆவது ஓவரில் பெங்களூரு அணி 147 ஓட்டங்களை குவித்தது.
எனினும் 16 ஆவது ஓவரின் முதல் பந்தில் சிம்ரன் ஹெட்மேயர் 5 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க கிரேண்ட்ஹோம் களிறங்க அதே ஓவரின் அடுத்த பந்தில் ஏ.பி.டி.வில்லியர்ஸ் அரசைதம் விளாசினார்.
தொடர்ந்தும் 18 ஆவது ஓவரை எதிர்கொண்ட அவர் அந்த ஓவரின் முதல் பந்தில் நான்கு ஓட்டத்தையும், 4,5 ஆவது பந்தில் இறு ஆறு ஓட்டங்களையும் அடுத்தடுத்து விளாச, பெங்களூரு அணி 18 ஓவர் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 166 ஓட்டங்களை பெற்றதுடன், வெற்றிக்கு 12 பந்துகளில் 22 ஓட்டம் தேவை என்ற நிலையிருந்தது.
இதேவேளை 18 ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் கிரேண்ட்ஹோம் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற சிவம் டூப் ஆடுகளம் நுழைந்தார். இரு ஓவருக்காக மலிங்க பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள 6 பந்துகளுக்கு 17 ஓட்டம் என்ற நிலையிருந்தது. எனினும் பெங்களூரு அணியால் அந்த ஓவரில் 11 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
அதன்படி பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 5 ஓட்த்தினால் தோல்வியைத் தழுவியது.
ஆடுகளத்தில் வில்லியர்ஸ் 41 பந்துகளில் 6 ஆறு ஒட்டம், 4 நான்கு ஓட்டம் அடங்களாக 70 ஓட்டத்துடனும், சிவம் டூப் 9 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் பும்ரா 3விக்கெட்டினையும், மாயன்க் மார்க்கண்டே ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.