தொடர் தோல்வியால் மனவேதனையில் கோஹ்லியின் பெங்களூர் அணி!
ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்து பெங்களூர் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அந்த அணியின் கேப்டன் கோஹ்லி விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில், பட்லர் கைகொடுக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது.
இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, ரகானே (22) சுமாரான துவக்கம் அளித்தார். பட்லர் (59) அரைசதம் அடித்து கைகொடுத்தார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித், திருப்பதி ஆகியோர் அதிரடியாக ரன்கள் சேர்க்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியை நோக்கி முன்னேறியது.
கடைசியில் ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இரண்டு அணிகளும் இதுவரை நடந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்திந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் முதல் வெற்றியை சந்திக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இதில், ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது. தொடர்ந்து 4 வது போட்டியிலும் கோஹ்லி தலைமையிலா பெங்களூர் தோல்வியை தழுவியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற கேப்டன், வராத்கோஹ்லியால், ஐபிஎல் போட்டியில் இதுவரை தனது பெங்களூரு அணிக்கு ஒரு வெற்றியை கூட தேடித்தர முடியவில்லை என்று விமர்சனங்கள் எழந்துள்ளன.
ஸ்கோர் விபரம்:
பெங்களூரு அணி: 158/4
20 ஓவர்கள்
பார்த்தீவ் பட்டேல்: 67 ரன்கள்
ஸ்டோனிஸ்: 31 ரன்கள்
விராத் கோஹ்லி: 23 ரன்கள்
ராஜஸ்தான் அணி: 164/3
பட்லர்: 59 ரன்கள்
ஸ்மித்: 38 ரன்கள்
திரிபதி: 34 ரன்கள்
ஆட்டநாயகன்: கோபால் (3 விக்கெட்டுக்கள்)