டெல்லி அணியை வீழ்த்திய ஐதராபாத் அணி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை குவித்தது.
ஐதராபாத் அணி சார்பில் முகமது நபி, புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், சந்தீப் சர்மா, ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது. வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களிலே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற 18.3 ஓவரில் 131 ரன்களை எடுத்து ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் 6 புள்ளிகளுடன் பட்டியலில் ஐதராபாத் அணி முதலிடம் பிடித்துள்ளது.