நடைப்பயிற்சியின் போது சிறைக்கைதி தப்பி ஓட்டம்!!

நேற்று சனிக்கிழமை Bas-Rhin நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவன் தப்பிச் சென்றுள்ளான்.
ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளது. Bas-Rhin இல் உள்ள d'Oermingen சிறைச்சாலையில் (de détention d'Oermingen) இருந்து நேற்று சனிக்கிழமை தப்பிச் சென்றுள்ளான். சிறைக்கதிகளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருந்த போது, அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். சனிக்கிழமை நண்பகலை ஒட்டி, 36 வயதுடைய சிறைக்கைதி தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், அவன் இன்று ஞாயிற்றுக்கிழமை Tieffenbach நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். தப்பிச் சென்ற சிறையில் இருந்து சில கிலோமீற்றர்கள் தூரத்தில் உள்ள Tieffenbach நகரில் வைத்து இன்று காலை 9:30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளான்.
நேற்றைய நடைப்பயிற்சியின் போது எவருமே விலங்குகள் பூட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கதை
