சென்னை அணி 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றி!

  PARIS TAMIL
சென்னை அணி 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றி!

நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரின் 23 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை 7 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது சென்னை அணி.
 
சென்னை, சிதம்பரம் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது.
 
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணிக்கு சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் மிரட்டலான பந்துவீச்சை மேற்கொண்டனர்.
 
இதனால் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிலைவில், 9 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
 
அணி சார்பாக அன்ட்ரூ ருசெல் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடனும், ஓட்டமற்றும் ஆட்டமிழந்தனர்.
 
சென்னை அணி சார்பாக மிரட்டல் பந்துவீச்சை மேற்கொண்ட தீபக் சாகர் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தகீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அத்துடன் ஜடேஜா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
 
இந்நிலையில், பதிலுக்கு 109 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அந்தவகையில் சென்னை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
 
அணி சார்பாக டூ பிளெசிஸ் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் அம்பதி ராயுடு 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
 
பந்துவீச்சில் கொல்கத்தா அணி சார்பாக சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும், பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மூலக்கதை