அக்டோபர் 15 வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

  தமிழ் முரசு
அக்டோபர் 15 வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 15ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லட்சத்தீவு, அதை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதேநேரம், குமரிக்கடல், அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, 15ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை