அதிபர் லாய்: தைவானைப் பிரதிநிதிக்கும் உரிமை சீனாவுக்கு இல்லை

  தமிழ் முரசு
அதிபர் லாய்: தைவானைப் பிரதிநிதிக்கும் உரிமை சீனாவுக்கு இல்லை

தைப்பே: தைவானைப் பிரதிநிதிக்கும் உரிமை சீனாவுக்கு இல்லை என்று தைவானிய அதிபர் லாய் சிங் டே தெரிவித்துள்ளார்.ஆனால் பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள சீனாவுடன் இணைந்து செயல்பட தைவான் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.இக்கருத்துகளை அவர் அக்டோபர் 10ஆம் தேதியன்று தெரிவித்தார்.அதிபர் லாயின் இக்கருத்துகள் சீனாவைக் கோபப்படுத்தியுள்ளது.கடந்த மே மாதம் தைவானின் அதிபராகப் பதவி ஏற்ற திரு லாயைச் சீனா பிரிவினைவாதி என்று அழைக்கிறது.தைவானைத் தனது ஒரு பகுதியாக சீனா பார்க்கிறது.ஆனால் இதை தைவான் மறுக்கிறது.தன்னை ஒரு தனிநாடாகத் தைவான் கருதுகிறது.“தைவானில் ஜனநாயகமும் சுதந்திரமும் செழித்தோங்குகிறது. தைவானின் இறையாண்மையைப் பாதுகாக்க கடப்பாடு கொண்டுள்ளேன்.சீனாவுடன் தைவான் இணைக்கப்படுவதைக் கடுமையாக எதிர்ப்போம் ,” என்று அதிபர் லாய் வலியுறுத்தினார்.“பருவநிலை மாற்றம், தொற்றுநோய் எதிர்ப்பு போன்றவை தொடர்பாக சீனாவுடன் இணைந்து செயல்பட தைவான் தயாராக இருக்கிறது. இருநாட்டு மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைதியை நிலைநாட்ட தைவான் விரும்புகிறது,” என்றார் அதிபர் லாய்.உலக நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டு சீனா நடந்துகொள்ள வேண்டும் என்று அதிபர் லாய் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, அதிபர் லாயின் இக்கருத்துகளை சீனா ஏற்க மறுத்துவிட்டது.தைவான் சீனாவின் ஒரு பகுதி என்று சீன வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியது.அரசியல் ஆதாயத்துக்காக இருநாடுகளுக்கு இடையே பதற்றநிலையை அதிபர் லாய் ஏற்படுத்துவதாக அது சாடியது.உலக நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டு சீனா நடந்துகொள்ள வேண்டும் என்று அதிபர் லாய் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், தைவானுக்கு அருகில் சீனா மேலும் பல போர்ப் பயிற்சிகளை நடத்தக்கூடும் என்று தைவானிய அதிகாரிகளும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை