'வேட்டையன்' படத்தை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்
சென்னை, தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்..இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்த நிலையில், டிரெய்லரும் பலரும் கவனிக்கும் வகையில் அமைந்தது. இப்படி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கும் 'வேட்டையன்' திரைப்படம், உலகமெங்கும் இன்று வெளியானது . ரசிகர்கள் வேட்டையன் படத்தை கொண்டாடி வருகின்றனர் .இந்த நிலையில், 'வேட்டையன்' படத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் வேட்டையன் சமூக திரைப்படம் , நீதித்துறை பற்றிய வலுவான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன .தலைவர் சிறப்பாக நடித்துள்ளார் . அமிதாப் , பகத் ஆகியோரை பார்க்க சிறப்பாக இருந்தது . அனிருத் வழக்கம் போல் நன்றாக இசையமைத்துள்ளார் . தீவிரமான தலைவர் படத்தை வழங்கியதற்காக படக்குழுவுக்கு நன்றி . என தெரிவித்துள்ளார்