பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: ராஜபக்சே சகோதரர்கள் முடிவு

  தமிழ் முரசு
பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: ராஜபக்சே சகோதரர்கள் முடிவு

கொழும்பு: இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ராஜபக்சே சகோதரர்கள் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே, அவர்களின் சகோதரர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான பசில் ராஜபக்சே, சமல் ராஜபக்சே ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.ஆயினும், மகிந்த ராஜபக்சேவின் மகனும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்சே இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பரப்புரைக்குத் தலைமை தாங்குவார் என்றும் அவர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவார் என்றும் ‘நியூஸ்வயர்’ செய்தி தெரிவிக்கிறது.வரும் நவம்பர் 14ஆம் தேதி இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரிக் கொள்கை உடையவரான அனுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை