மறைந்த ரத்தன் டாடாவுக்கு மணற்சிற்பம் மூலம் அஞ்சலி
பூரி: இந்தியாவின் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மணற் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.புகழ்பெற்ற சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் ரத்தன் டாடாவை மணற் சிற்பமாக வடித்துள்ளார்.இதைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள சுதர்சன், “ரத்தன் டாடாவின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு,” என்று குறிப்பிட்டுள்ளார்.புகழ்பெற்ற தொழிலதிபரும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை (அக்டோபர் 9) காலமானார். அவருக்கு வயது 86.வியாழக்கிழமை பின்னேரம் அவரது நல்லுடல், மும்பை வோர்லி மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட பலரும் கலந்துகொண்டனர்.