டாடா அறக்கட்டளைத் தலைவராக நோயல் டாடா

  தமிழ் முரசு
டாடா அறக்கட்டளைத் தலைவராக நோயல் டாடா

புதுடெல்லி: பெருந்தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவையடுத்து, டாடா அறக்கட்டளை அமைப்பின் தலைவராக அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் நாவல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார் என்று ‘சிஎன்பிசி டிவி18’ ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.டாடா குழுமத்தின் அருட்கொடை அமைப்புதான் டாடா அறக்கட்டளை. அவ்வமைப்பு, திரு ரத்தன் மற்றும் திரு நோயலின் பாட்டனார் ஜாம்செட்ஜி டாடாவால் 1892ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் அந்த அறக்கட்டளை, கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, வீடமைப்பு எனப் பல துறைகளுக்கு விரிவாக்கம் கண்டது.இப்போது, ஸ்ரீ ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ தோராப்ஜி டாடா அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்து வருகிறார் திரு நோயல் டாடா. அத்துடன், டாடா டிரென்ட் நிறுவனத்தின் தலைவராகவும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் அவர் இருந்து வருகிறார். திருமணமே செய்துகொள்ளாமல் தமது 86ஆவது வயதில் உயிர்நீத்த திரு ரத்தன் டாடா பெருவள்ளல் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, திரு நோயல் டாடாவின் நியமனம் குறித்து அறிந்துகொள்வதற்காக டாடா அறக்கட்டளையைத் தொடர்புகொண்டபோது உடனடியாகப் பதில் கிடைக்கவில்லை என்று ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி தெரிவித்தது.

மூலக்கதை