தென்கொரியா எழுத்தாளருக்கு உலகளாவிய அங்கீகாரம்

  தமிழ் முரசு
தென்கொரியா எழுத்தாளருக்கு உலகளாவிய அங்கீகாரம்

சோல்: தென்கொரியாவைச் சேர்ந்த எழுத்தாளரான ஹான் காங், இலக்கியத்துக்கான நோபெல் பரிசை வென்றுள்ளார்.இலக்கியத்தில் தென்கொரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் நோபெல் பரிசு பெறுவது இதுவே முதல் முறை. அவரது சிறந்த நாவல் வெளியிடப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 53 வயது ஹான் காங்கின் ‘த வெஜிடேரியன்’ (The Vegetarian) நாவலுக்கு 2016ஆம் ஆண்டில் ‘மேன் புக்கர்’ அனைத்துலக விருது (Man Booker International prize) கிடைத்தது.பல மொழிகளில் ‘த வெஜிடேரியன்’ நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் மில்லியன் பிரதிகளுக்குக் குறைவாகவே விற்பனையானது. ஆனால் நோபெல் பரிசை வென்றதால் அதன் விற்பனை கூடியிருக்கிறது.வெள்ளிக்கிழமை அன்று அவரது நாவல்கள், கவிதைகள், கதைகளைத் தேடி ஏராளமானோர் புத்தகக் கடைகளில் குவிந்தனர்.“வரலாற்றின் பெரும் துயரங்களையும், மனித வாழ்வின் பலவீனத்தையும் கவித்துவமான மொழியில் அவர் எழுதும் ஆழமான உரைநடைக்காக பரிசு வழங்கப்படுகிறது,” என்று நோபெல் பரிசுக் குழு அவரை பாராட்டியிருக்கிறது.

மூலக்கதை