கீர்த்தி, ராஷ்மிகாவின் கலவை பாக்யஸ்ரீ: கொண்டாடும் ரசிகர்கள்
தெலுங்கு ரசிகர்கள் நாள்தோறும் உச்சரிக்கும் பெயர்களில் ஒன்றாக மாறியுள்ளது பாக்யஸ்ரீ. தெலுங்கு தேசத்தில் அண்மையில் வீசிய புயல் இவர்தான். பாக்யஸ்ரீயும் ரவிதேஜாவும் இணைந்து நடித்த ‘மிஸ்டர் பச்சன்’ படம் வசூலில் சாதித்ததை அடுத்து, துல்கர் சல்மானுடன் ‘காந்தா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பாக்யஸ்ரீ. ராஷ்மிகா மந்தனாவையும் கீர்த்தி சுரேஷையும் சேர்த்து செய்த கலவைதான் பாக்யஸ்ரீ என்று தெலுங்கு ரசிகர்கள் வர்ணிக்கிறார்கள். இந்நிலையில், நானி நடிக்கும் அடுத்த படத்திலும் இவர்தான் நாயகி என்று அண்மையில் வெளியான அறிவிப்பு மற்ற கதாநாயகிகளைப்பொறாமைப்பட வைத்துள்ளது.அனைத்துக்கும் உச்சமாக, விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதுப் படத்திலும் பாக்யஸ்ரீ ஒப்பந்தமான தகவல் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகத்தையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் இலங்கையில் தொடங்கப்பட உள்ள நிலையில், தெலுங்கு முன்னணி நாயகனும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் ஜோடியாக பாக்யஸ்ரீயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். மேலும் மகேஷ் பாபுவின் பார்வையும் இவர் பக்கம் திரும்பி இருப்பதாகத் தகவல்.“மகாராஷ்டிராவில் பிறந்த எனக்கு 25 வயதாகிறது. சொந்த ஊர் அவுரங்காபாத். இந்தியில் வெளியான ‘யாரியான்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானேன். அடுத்து இந்தியில் தயாரான ‘சந்து சாம்பியன்’ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்தேன்.“அதன் பிறகு தெலுங்குப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ள எனக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு கிடைத்தது என்னையே ஆச்சரியப்பட வைத்துள்ளது,” என்று வியப்பு குறையாமல் பேசுகிறார் பாக்யஸ்ரீ.இவரது தந்தை தொழிலதிபராம். தனது அடுத்த வாரிசை உருவாக்கும் எண்ணத்துடன் மகளைத் தொழில் மேலாண்மைத் துறையில் பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளார். எனினும், மற்ற இளம் நாயகிகள் குறிப்பிடுவதைப் போல் தனக்கும் சிறு வயது முதலே நடிகையாக வேண்டும் என்ற ஆர்வம்தான் அதிகமாக இருந்தது என்கிறார் பாக்யஸ்ரீ.“பள்ளி இறுதியாண்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அவ்வப்போது ‘மாடலிங்’ நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தேன். பின்னர் மராட்டிய மொழியில் ‘லெக் மஸ்ஸி லக்கி’ தொலைக்காட்சித் தொடரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமூக ஊடகங்களில் எனக்கு ஆர்வம் அதிகம். அதில் தீவிரமாக இயங்கி வருவதால் ஏராளமான ரசிகர்கள் என்னைப் பின்தொடர்கின்றனர்.“தெலுங்கில் ஐந்தாறு படங்களில் நடிப்பதாக நான் அறிவிக்கும் முன்பே ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளனர். ஒரு வகையில் இந்த வளர்ச்சி மகிழ்ச்சியை மீறி ஒருவித பயத்தைத் தருகிறது,” என்கிறார் பாக்யஸ்ரீ.‘மிஸ்டர் பச்சன்’ படத்தில் இவர் ஆடியிருந்த கவர்ச்சி நடனத்துக்கு அடிமையாகவிட்டதாக சமூக ஊடகங்களில் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.பாக்யஸ்ரீக்காக எதையும் செய்யத் தயார் என்று கூறும் ரசிகர்கள், ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ள இவருக்கு இப்போதே ரசிகர் மன்றத்தைத் தொடங்கி உள்ளனராம்.“என்னை ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். அவர்கள் திரைத்துறையில் அதிக அனுபவம் உள்ளவர்கள். பல வெற்றிப்படங்களில் நடித்துச் சாதித்தவர்கள். எனவே அவர்களுடன் என்னை ஒப்பிடுவது சரியல்ல. “எனக்குக் கிடைத்துள்ள வெற்றித் தொடக்கம் எல்லோருக்கும் அமைந்துவிடாது. இந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள நான் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்துள்ளேன். “எனவே அடுத்தடுத்து நல்ல கதைகளைத் தேர்வு செய்ய வேண்டும், நன்றாக நடிக்க வேண்டும் என்பதையும் புரிந்துவைத்துள்ளேன். இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றும் வரை கவனமாக இருப்பேன்,” என்று பொறுப்புடன் பேசுகிறார் பாக்யஸ்ரீ.