இலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சீனர்கள்! 22 பெண்கள் உட்பட 130 பேர் கைது - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சீனர்கள்! 22 பெண்கள் உட்பட 130 பேர் கைது  லங்காசிறி நியூஸ்

22 பெண்கள் உட்பட 130 சீனர்கள் ஆன்லைன் மோசடி தொடர்பாக இலங்கையின் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கண்டியின்(Kandy) குண்டசாலே-வில்(Kundasale) உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், ஆன்லைன் மோசடி தொடர்புடைய 130 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 22 பேர் பெண் சந்தேக நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் குழு குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கண்டி மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இந்த கைது நிகழ்த்தப்பட்டுள்ளது.அங்கு ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்த பலர் இருந்த நிலையில், சிலர் சோதனையின் போது தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட 123 லேப்டாப்கள், 206 ஸ்மார்ட்போன்கள், 20 டெஸ்க்டாப் கணினிகள் மற்றும் பிற கருவிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேக நபர்கள் கிட்டத்தட்ட ஹோட்டலின் 47 அறைகளில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் இருப்பதற்கான காரணம் தெளிவாக தெரிய வராத நிலையில், பிடிபட்ட குழு திங்கட்கிழமை தெல்தெனியா(Theldeniya) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை