திருவேற்காடு கோயில் பெண் தர்மகர்த்தா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்தது உயர் நீதிமன்றம்

  தமிழ் முரசு
திருவேற்காடு கோயில் பெண் தர்மகர்த்தா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்தது உயர் நீதிமன்றம்

சென்னை: சென்னை திருவேற்காட்டில் பிரசித்திபெற்ற தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 12 பெண்களுடன் நடனமாடி ரீல்ஸ் காணொளி எடுத்த பெண் தர்மகர்த்தாவான வளர்மதி மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.அதில், “இந்துக்களின் புனிதமான கோயில் வளாகத்தில் பெண் தர்மகர்த்தாவே 12 பெண்களுடன் நடனமாடி ரீல்ஸ் காணொளி எடுத்திருப்பது பக்தர்களின் மனத்தைப் புண்படுத்துவது போல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பெண் தர்மகர்த்தா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து, வரும் அக்டோபர் 29ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

மூலக்கதை