நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் ரயில் தீபாவளிக்கு அறிமுகம்

  தமிழ் முரசு
நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் ரயில் தீபாவளிக்கு அறிமுகம்

புதுடெல்லி: தீபாவளியையும் ‘சாத்’ பண்டிகையையும் முன்னிட்டு நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. 994 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் அந்த ரயில் புதுடெல்லியிலிருந்து பாட்னா வரை செல்லும்.நாடு முழுதும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது. அதேபோல், வட மாநிலங்களில் உற்சாகமாகக் கொண்டாடப்படும் ‘சாத்’ பண்டிகையும் நவம்பர் முதல் வாரத்தில் வருகிறது. அதைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் பணிபுரிவோர் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை அறிவிக்கும்.அந்த வகையில், தீபாவளியன்று நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே முடிவெடுத்துள்ளது. இதற்கு முன்னர், டெல்லி - வாரணாசி இடையில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், நீண்ட தூரம் செல்லும் ரயில் என்ற பெருமையைப் பெற்றது.புதிதாக அறிமுகம் செய்யப்படும் டெல்லி - பாட்னா வந்தே பாரத் ரயில் அக்டோபர் 30 முதல் இயக்கப்பட உள்ளது.

மூலக்கதை