உக்ரேனுக்கு வடகொரியா உதவினால் பூசல் பெரிதாகும்: நேட்டோ

  தமிழ் முரசு
உக்ரேனுக்கு வடகொரியா உதவினால் பூசல் பெரிதாகும்: நேட்டோ

பிரசல்ஸ்: உக்ரேனை எதிர்த்துப் போரிட ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா ராணுவத் துருப்புகளை அனுப்பினால் அது பூசலை மேலும் சிக்கலாக்கிவிடும் என்று நேட்டோ தெரிவித்து உள்ளது.மாஸ்கோவின் போர் முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு வடகொரியா 10,000 ராணுவ வீரர்களை உக்ரேனுக்கு அனுப்பத் தயாராகி வருவதாக உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி கடந்த வாரம் கூறியிருந்தார்.ரஷ்யா ஆக்கிரமித்து உள்ள உக்ரேன் வட்டாரத்தில் வடகொரிய ராணுவ அதிகாரிகள் ஏற்கெனவே குவிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். அந்தத் தகவலை மேற்கோள் காட்டி, நேட்டோவின் தலைமைச் செயலாளர் மார்க் ரூட் தமது எக்ஸ் தளத்தில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுத விநியோகம் செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்டகாலமாகக் கூறிவருகின்றன. இதற்கிடையே, உக்ரேனில் வடகொரிய ராணுவம் நிலைகொண்டு இருப்பது பற்றி எந்த ஓரு தடயமும் இல்லை என்று திரு ரூட்டும் அமெரிக்க ராணுவத் தலைமையக அதிகாரிகளும் கடந்த வாரம் கூறினர்.

மூலக்கதை