எமர்ஜிங் ஆசிய கோப்பை; யு.ஏ.இ அணியை வீழ்த்தி இந்தியா 'ஏ' அபார வெற்றி

  தினத்தந்தி
எமர்ஜிங் ஆசிய கோப்பை; யு.ஏ.இ அணியை வீழ்த்தி இந்தியா ஏ அபார வெற்றி

அல் அமேரத்,வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது.இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ அணி ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.) அணிகள் மோதின.இதில் முதலில் பேட்டிங் செய்த 16.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 10.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் யு.ஏ.இ. அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

மூலக்கதை