நியூசிலாந்து விமான நிலையத்தில் 3 நிமிட அரவணைப்பு வரம்பு

  தமிழ் முரசு
நியூசிலாந்து விமான நிலையத்தில் 3 நிமிட அரவணைப்பு வரம்பு

டனிடன்: நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டனிடன் விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் பகுதியில் கட்டிப்பிடிப்பதற்கு மூன்று நிமிட வரம்பு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய விதிமுறை செப்டம்பர் 26ஆம் தேதி அறிமுகமானது. “மேலும் நெருக்கமான பிரியாவிடைகளுக்கு கார் நிறுத்தும் இடத்தைப் பயன்படுத்துங்கள்,” என்று அறிவிப்புப் பலகை ஒன்றில் குறிப்பிடப்பட்டது. விமான நிலையத்தின் முடிவால், சமூக ஊடகத்தில் பலவிதமான கருத்துகள் பதிவாயின. கட்டிப்பிடிப்பது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து சிலர் சினமடைந்தனர். வேறு சிலரோ, விமான நிலையத்தில் அதற்கென இடம் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து வியப்படைந்தனர். இந்நிலையில், இவ்வாறு பயணிகள் விரைவாகப் புறப்பட்டால், மேலும் அதிகமானோர் அத்தகைய அர்த்தமுள்ள அரவணைப்புகளைப் பெற முடியும் என்று டனிடன் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டானியல் டி போனோ கூறினார்.

மூலக்கதை