கோவையில் பயன்படுத்தப்படாத 468 ஏக்கர் நிலம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

  தமிழ் முரசு
கோவையில் பயன்படுத்தப்படாத 468 ஏக்கர் நிலம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

கோவை: வீட்டு வசதி திட்டங்களுக்காக கோவையில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அரசால் கையகப்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்படாத 468 ஏக்கர் நிலம், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) அதன் உரிமையாளர்களான 5,338 பேரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. நில உரிமையாளர்களுக்கான விடுவிப்பு ஆணைகளையும் தடையின்மை சான்றுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.தமிழகத்தில் பல்வேறு அரசுத் திட்டங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்படாத நிலங்கள் உரிமையாளர்களிடம் திரும்பவும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த1981 முதல் 1995ஆம் ஆண்டுவரை கோவை வீட்டு வாரியப் பிரிவு சார்பில் கையகப்படுத்தப்பட்ட இந்த நிலங்கள் அனைத்தும் கணபதி, விளாங்குறிச்சி, வீரகேரளம், தெலுங்குப்பாளையம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, குமாரபாளையம், காளப்பட்டி, உப்பிலிபாளையம் உள்ளிட்ட ஒன்பது கிராமங்களில் அமைந்துள்ளன.

மூலக்கதை