பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல, புதிய அமைதியாகவும் பிறக்கலாம் - நடிகர் பார்த்திபன்

  தினத்தந்தி
பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல, புதிய அமைதியாகவும் பிறக்கலாம்  நடிகர் பார்த்திபன்

சென்னை,இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று இரவு அறிவித்தார். இதனை சில மணிநேரத்திலேயே ஏ.ஆர். ரகுமானும் உறுதி செய்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாய்ரா பானு அறிவித்தார்.ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு இடையேயான 29 ஆண்டு கால திருமண வாழ்வு முறிந்துள்ளது திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இது குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-பிரிவு: இசை ஸ்வரங்கள் பிரிவதால்தான், பிறக்கும் ஒரு நாதமே… குடைக்குள் மழை நானெழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது. பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல, புதிய அமைதியாகவும் பிறக்கலாம். நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனிய வழியுள்ளதா என சம்மந்தப்பட்டவர்கள் ஆராயலாம். ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போலே, ஊர் விலகி 'பிரிவு' என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.பிரிவு:இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான் , பிறக்கும் ஒரு நாதமே…குடைக்குள் மழை' நானெழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது. பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல , புதிய அமைதியாகவும் பிறக்கலாம். நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே…

மூலக்கதை