ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மன் கில் பங்கேற்பது சந்தேகம்..?
அடிலெய்டு,இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந் தேதி பகல்-இரவாக அடிலெய்டுவில் தொடங்குகிறது. இந்த டெஸ்டுக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலிய பிரதமர் லெவலுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்தப் போட்டி வருகிற 30 மற்றும் 1-ந் தேதிகளில் கான்பெராவில் நடக்கிறது. இடது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் சுப்மன்கில் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. சுப்மன் கில்லின் காயம் இன்னும் ழுமையாக குணமாகவில்லை என்றும், காயம் குணமாக 10 முதல் 14 நாட்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.