'பாம்பன் பாலத்தின் கட்டுமான பணியில் எந்த குழப்பமும் இல்லை' - தென்னக ரெயில்வே பொதுமேலாளர்

  தினத்தந்தி
பாம்பன் பாலத்தின் கட்டுமான பணியில் எந்த குழப்பமும் இல்லை  தென்னக ரெயில்வே பொதுமேலாளர்

ராமநாதபுரம்,ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே உள்ள 105 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரெயில் பாலத்தின் அருகிலேயே ரூ.550 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பாலத்தின் மீது ரெயில் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இறுதிக்கட்ட பணிகள் நிறைவு பெற்றவுடன் இந்த பாலம் விரைவில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் புதிய பாம்பன் ரெயில்வே பாலத்தின் கட்டுமான பணிகளில் குறைபாடுகள் இருப்பதாக தெற்கு ரெயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், இது குறித்து தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாம்பன் பாலத்தின் கட்டுமான பணியில் எந்த குழப்பமும் இல்லை. ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சில விஷயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். அது வழக்கமான அறிவுறுத்தல்தான். அவற்றை ஒரு வாரத்தில் சரிசெய்து விரைவில் பாலத்தை திறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

மூலக்கதை