மணிமுக்தா நதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு
கள்ளக்குறிச்சி,மணிமுக்தா நதி அணையிலிருந்து இன்று(6.12.2024) முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணிமுக்தா நதி அணையிலிருந்து இன்று (06.12.2024) முதல் 25.02.2025 வரை 82 நாட்களுக்கு 556.26 (590.00- 33.74 = 556.26) மில்லியன் கனஅடி மிகாமல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் உள்ள 4,250 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.