வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டி: வங்காளதேசம் அபார வெற்றி

  தினத்தந்தி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டி: வங்காளதேசம் அபார வெற்றி

செயிண்ட் வின்செண்ட்,வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்காளதேச கிரிக்கெட் அணி அந்நாடு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 3-0 என்ற புள்ளி கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.இதையடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் முன்னிலையில் இருந்தது.இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று செயிண்ட் வின்செண்ட் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றிபெற்றது. மேலும் , 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற புள்ளிகளில் முழுமையாக கைப்பற்றியது.

மூலக்கதை