நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்... பலியான பரிதாபம்

  தினத்தந்தி
நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்... பலியான பரிதாபம்

இடுக்கி, இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே முட்டம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் கொல்லத்தை சேர்ந்த ஆக்ஷாரெஜி (வயது 22) மற்றும் அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் இடுக்கி முரிக்காஞ்சேரி பகுதியை சேர்ந்த டோனன் ஷாஜி (22) ஆகிய இருவரும் நண்பர்கள் ஆவர். இந்நிலையில் இருவரும் முட்டம் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள தடாகத்தில் அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் 2 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், நீர்வீழ்ச்சி தடாகத்தில் இறங்கி இருவரின் உடல்களையும் மீட்டனர். இதனை பார்த்து சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தடாகத்தில் குளித்தபோது 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை