அந்த இந்திய வீரரை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் - சாம் கான்ஸ்டாஸ்

  தினத்தந்தி
அந்த இந்திய வீரரை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்  சாம் கான்ஸ்டாஸ்

மெல்போர்ன்,இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.இந்த கடைசி 2 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் போட்டியில் அறிமுகம் ஆன நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கான்ஸ்டாஸ் இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதமடித்திருந்தார். அதன் காரணமாக அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பும்ரா குறித்து அதிகம் சிந்திக்க மாட்டேன் என்றும், அவரை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளதாகவும் சாம் கான்ஸ்டாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடும்போது அவர் (பும்ரா) குறித்து நான் அதிகம் சிந்திக்க மாட்டேன். ஏனென்றால் அவரை நான் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் என்னை நானே சவால் செய்து நிச்சயமாக அவரை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். பொதுவாக எங்களது ஆய்வாளர்கள் எங்கள் எதிரணியின் பந்துவீச்சாளர்கள் குறித்து சில ஒழுக்கங்களை ஆராய்வார்கள். எனவே அதில் மட்டும் நான் கவனம் செலுத்தி அவர் குறித்து சில விஷயங்களை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை