சுரங்க பாதைகளில் தானியங்கி தடுப்பு - சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

  தினத்தந்தி
சுரங்க பாதைகளில் தானியங்கி தடுப்பு  சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

சென்னை,கனமழை காலங்களில் சென்னையில் உள்ள 17 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மழை நேரங்களில் சில நேரம் பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை சுரங்கப்பாதைகளில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இதனை தடுக்கும் வகையில் புதிய முயற்சியாக, சென்னையில் மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்தை தடை செய்ய தானியங்கி தடுப்புகளை அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதன்படி சுரங்கப்பாதைகளில் மழைநீர் அளவு உயர்வதை தானாக கண்டறிய ஒரு தானியங்கி அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு, செயலி மூலம் மழைநீர் உயர்வது தொடர்பான தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்படும் என்றும், போக்குவரத்து தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை