இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேல் - மேகா தம்பதிக்கு ஆண் குழந்தை

  தினத்தந்தி
இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேல்  மேகா தம்பதிக்கு ஆண் குழந்தை

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான அக்சர் படேல், தனது நீண்ட கால காதலியான மேகாவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் குஜராத் மாநிலம் வதோதராவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் அக்சர் படேல் - மேகா தம்பதியினருக்கு கடந்த 19-ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பை 5 நாட்கள் கழித்து அக்சர் படேல் தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார். அந்த பதிவில் தனது குழந்தைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும் தனது குழந்தைக்கு 'ஹக்ஷ் படேல்' என பெயரிட்டுள்ளார். A post shared by Axar Patel (@akshar.patel)

மூலக்கதை