கர்நாடகத்தில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை - கணவரிடம் போலீஸ் விசாரணை

  தினத்தந்தி
கர்நாடகத்தில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை  கணவரிடம் போலீஸ் விசாரணை

பெங்களூரு,கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கே.ஜி.எப். தாலுகாவை சேர்ந்தவர் திப்பம்மா(வயது 38). இவருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இதனிடையே திப்பம்மாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று திப்பம்மா தனது 7 வயது பெண் குழந்தை மற்றும் 4 வயது ஆண் குழந்தை என இருவரையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து, பின்னர் தானும் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து திப்பம்மாவின் கணவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த திப்பம்மா மற்றும் அவரது 2 குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கணவருடன் ஏற்பட்ட சண்டையால் திப்பம்மா இந்த முடிவை எடுத்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதே சமயம், திப்பம்மாவின் கணவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை