பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி
டேராடூன்,உத்தரகாண்ட் மாநிலம் அல்மொரா மாவட்டத்தில் இருந்து நைனிதல் மாவட்டம் ஹல்ட்வானி பகுதிக்கு இன்று மதியம் பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 27 பேர் பயணித்தனர். இந்நிலையில், மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் 1500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.