கட்டுமான பணியின்போது கிரேன் விழுந்து 3 பேர் பலி

  தினத்தந்தி
கட்டுமான பணியின்போது கிரேன் விழுந்து 3 பேர் பலி

காந்தி நகர்,குஜராத் மாநிலம் தேவ்பூமி தவார்கா மாவட்டம் ஒஹா பகுதியில் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இன்று கட்டுமான பணி நடைபெற்றது. இந்த கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் திடீரென தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை