அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு
சென்னை,மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை மறுநாள் (27-ந்தேதி) சென்னை வர உள்ளதாகவும் தமிழகத்தில்நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது .இந்த நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .ஜனவரி முதல் வாரத்தில் அமித்ஷா தமிழகத்திற்கு வருவார் என்று பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.