வரலாற்று சிறப்புமிக்க பணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி60 தயாராக உள்ளது - இஸ்ரோ

  தினத்தந்தி
வரலாற்று சிறப்புமிக்க பணிக்கு பி.எஸ்.எல்.வி.சி60 தயாராக உள்ளது  இஸ்ரோ

சென்னை,ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. 'ஸ்பேடெக்ஸ்-ஏ', 'ஸ்பேடெக்ஸ்-பி' என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படுகிறது.இந்த ராக்கெட்டை இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில், ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றப்பட்டது. அதன்படி, இன்று இரவு 9.58 மணிக்கு பதிலாக, இரவு 10 மணி 15 வினாடிகளுக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. இந்த திடீர் மாற்றம் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், அதே சுற்று வட்டப்பாதையில் பிற செயற்கைகோள்களின் நெருக்கடி இருப்பதால் விண்ணில் ஏவும் பணி இரண்டு நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறி இருந்தார். இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க பணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி60 தயாராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதன்படி வருகிற 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக 'ஸ்பேஸ்-எக்ஸ்' எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ⏳ T-1 Hour to Liftoff! PSLV-C60 ready for the historic mission. Liftoff: 30 Dec, 10:00:15 PM (22:00:15 hours)Stay tuned for updates! Watch live: https://t.co/D1T5YDD2OT (from 21:30 hours) More info: https://t.co/jQEnGi3W2d#SpaDeX #ISRO … pic.twitter.com/ByMdJ2nTct

மூலக்கதை