தாயை இழந்த குட்டி யானை: பிற யானைக்கூட்டங்கள் எற்காததால் முகாமுக்கு மாற்றம்

  தினத்தந்தி
தாயை இழந்த குட்டி யானை: பிற யானைக்கூட்டங்கள் எற்காததால் முகாமுக்கு மாற்றம்

கோவை,கோவை, தடாகம் அடுத்த பன்னிமடை வனப்பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை 35 வயது மதிக்கதக்க பெண் யானை இறந்த நிலையில் கண்டறியப்பட்ட நிலையில், அதன் ஒரு மாத குட்டி யானை, தாயை பிரிந்த தவிப்பில் உலாவிக் கொண்டிருந்தது. தொடர்ந்து குட்டியை மீட்ட வனத்துறையினர், தடாகம் வனப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதுவரை எந்த யானை கூட்டமும் குட்டியை ஏற்றுக்கொள்ளாததால், 7 ஆவது நாளாக வனத்துறையினர் வேறு யானை கூட்டத்திடம் சேர்க்க முயன்றனர். அந்த யானை கூட்டமும் குட்டி யானையை சேர்க்க முன்வரவில்லை. குட்டி யானையை யானைக்கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்தது. ஒருவாரகால முயற்சிக்கு பலன் இல்லாததால் முதுமலை முகாமுக்கு குட்டி யானையை கொண்டு செல்ல முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, உயிரிழந்த யானையின், ஒருமாத குட்டியை முதுமலை முகாமுக்கு வனத்துறையினர் கொண்டுவந்தனர். யானை குட்டியை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

மூலக்கதை