நக்சலைட்டுகள் தாக்குதல்; உயிரிழந்தவர்களின் தியாகம் வீண் போகாது: அமித் ஷா

  தினத்தந்தி
நக்சலைட்டுகள் தாக்குதல்; உயிரிழந்தவர்களின் தியாகம் வீண் போகாது: அமித் ஷா

புதுடெல்லி:சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்பு படையினர் 8 பேர் பலியானார்கள். நக்சலைட்டுகளின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, இச்சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-"பிஜப்பூரில் பாதுகாப்பு வீரர்கள் இறந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாது. ஆனால் நமது வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று உறுதியளிக்கிறேன். மார்ச் 2026-க்குள் இந்தியாவில் நக்சலிசத்தை ஒழிப்போம்".இவ்வாறு அமித்ஷா தனது 'எக்ஸ்' பதிவில் கூறியுள்ளார்.இது கடந்த 2 ஆண்டுகளில் சத்தீஸ்காரில் பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை