சட்டசபை 5வது நாள் கூட்டம் தொடங்கியது

  தினத்தந்தி
சட்டசபை 5வது நாள் கூட்டம் தொடங்கியது

சென்னை,நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று 4-ம் நாள் கூட்டத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானத்தை ஏற்க மறுப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இந்த தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.தனித் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.இந்த நிலையில், இன்று சட்டசபை 5வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமனம் செய்வது குறித்த மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது .

மூலக்கதை