வைரலாகும் மாரி செல்வராஜின் 'பைசன்' பட வாழ்த்து போஸ்டர்
சென்னை,கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்',மற்றும் 'வாழை' உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார்.இதைத் தொடர்ந்து ஆதித்யா வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'பைசன் காளமாடன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தநிலையில், இன்று உழவர் திருநாளை முன்னிட்டு, 'பைசன்' படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். அதில் 'அனைவருக்கும் எங்கள் தெக்கத்தி காளமாடனின் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார். இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.பைசன் அனைவருக்கும் எங்கள் தெக்கத்தி காளமாடனின் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் #BISON 2025 @applausesocial @beemji @NeelamStudios_ @nairsameer @nivaskprasanna @Tisaditi #DhruvVikram @Netflix_INSouth @NetflixIndia pic.twitter.com/LxmYdZbqoh