தெலுங்கில் அறிமுகமாகும் விக்ரம் பிரபு
சென்னை,கடந்த 2012-ம் ஆண்டு பிரபு சாலமனின் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு . அந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, இவர் நடித்த படங்கள் அவருக்கு பெரியளவில் கை கொடுக்கவில்லை.கடந்த 2022-ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான டாணாக்காரன் திரைப்படத்தை நடிகரும் இயக்குநருமான தமிழ் இயக்கியிருந்தார். நேரடியாக ஓ.டி.டியில் வெளியான இப்படம் விக்ரம் பிரபுவிற்கு "கம் பேக்" ஆகவே அமைந்தது. கடைசியாக 2023-ம் ஆண்டு யுவராஜ் தயாளன் இயக்கிய இறுகப்பற்று திரைப்படத்தில் விக்ரம் பிரபு நடித்திருந்தார்.இந்நிலையில், இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்து வரும் 'காதி 'படத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'காதி ' படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.Team #GHAATI roars with pride as we wish the incredible @iamVikramPrabhu garu a very Happy Birthday Brace yourselves to feel the fire and witness him set the screen ablaze as the explosive #DesiRaju.A Special Glimpse Video dropping today at 4:30 PM.#GHAATI on 18th April… pic.twitter.com/oKmZnJArTe