'தருணம்' படத்தின் திரையிடல் நிறுத்தம் - படக்குழு திடீர் அறிவிப்பு

  தினத்தந்தி
தருணம் படத்தின் திரையிடல் நிறுத்தம்  படக்குழு திடீர் அறிவிப்பு

சென்னை,'தேஜாவு' படத்தின் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.மேலும் இந்த படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது.இந்நிலையில், 'தருணம்' படத்தின் திரையிடல் நிறுத்தி வைக்கப்படுவதாக படக்குழு திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியானதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளதோடு, புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.#Tharunam pic.twitter.com/MzkOnbBFjn

மூலக்கதை