பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட்: இன்று தொடக்கம்
முல்தான், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று காலை 10 மணியளவில் தொடங்க உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரு அணிகளுக்கும் கடைசி தொடர் இது என்பதால் புள்ளி பட்டியலில் ஏற்றம் காண இரண்டும் முயற்சிக்கும். இதனால் இது எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.