ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முன்னணி வீரர் மெட்வதேவ் அதிர்ச்சி தோல்வி
மெல்போர்ன்,'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் மெட்வதேவ், அமெரிக்காவின் லியானெர் டியன் உடன் மோதினார்.இந்த ஆட்டத்தில் முதல் இரு செட்டை இழந்த மெட்வதேவ், அடுத்த இரு செட்டை போராடி கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற கடைசி செட்டை லியானெர் டியன் கைப்பற்றி மெட்வதேவுக்கு அதிர்ச்சி அளித்தார்.4 மணி 49 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லியானெர் டியன் 6-3, 7-6, 6-7, 1-6, மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் மெட்விடேவை வீழ்த்தினார். அதிர்ச்சி தோல்வியடைந்த மெட்வதேவ் இந்த தொடரிலிருந்து வெளியேறினார்.