''எல் 2 எம்புரான்'' - டோவினோ தாமஸின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தது படக்குழு

  தினத்தந்தி
எல் 2 எம்புரான்  டோவினோ தாமஸின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தது படக்குழு

சென்னை,தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார்.தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாலமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், டோவினோ தாமஸின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தில் அவரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் அவர் ஜதின் ராம்தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இப்படம் மார்ச் 27-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.Jathin Ramdas! Power…is an illusion!Malayalam | Tamil | Telugu | Kannada | Hindi@Mohanlal @PrithviOfficial #muraligopy @antonypbvr @aashirvadcine @Subaskaran_A @LycaProductions @gkmtamilkumaran @prithvirajprod #SureshBalaje #GeorgePius @ManjuWarrier4 @ttovino @Indrajith_S… pic.twitter.com/uZXvlHDpk5

மூலக்கதை