சினிமா சூட்டிங் போல விஜய் பேசுகிறார் - நடிகர் எஸ்.வி.சேகர்
சென்னை,சென்னையில் நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-நடிகர் விஜய் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை. சினிமா சூட்டிங் போன்று ஆங்காங்கே குரூப் குரூப்பாகச் சென்று பேசுகிறார். 234 தொகுதிகளிலும் அவர் போட்டியிடப் போகிறார் என்றால், புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒண்ணும் செய்ய முடியாது; அது அவருக்கும் தெரியும். தற்போதைய அரசியல் சூழல் அப்படியே நீடித்தால் திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும்.தேர்தல் என்பது கூட்டணி கணக்கு; இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. அதற்கு முன்பே அவரை (விஜய்) விமர்சிக்ககூடாது. தமிழ்நாட்டில் வெற்றி, தோல்வி 4 லட்சம் ஓட்டுகளின் தான் தீர்மானிக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் எனது சில கோரிக்கைகளை நிறைவேற்றினால், அவருக்காக நிச்சயமாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்வேன். எனக்கு 75 வயதாகிவிட்டது என்பதால், நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஏற்கனவே கூறிவிட்டேன். இருப்பினும், எனது மகன் திமுகவில் விருப்பம் இருந்தால் இணையலாம். தேர்தலிலும் போட்டியிடலாம். ஆனால், நேர்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.