நாங்கள் அனைவரும் விரும்பக்கூடிய கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - இங்கிலாந்து பயிற்சியாளர்

  தினத்தந்தி
நாங்கள் அனைவரும் விரும்பக்கூடிய கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம்  இங்கிலாந்து பயிற்சியாளர்

கொல்கத்தா,இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.அதன்படி இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம், இந்திய தொடரில் இருந்து வெள்ளைநிற பந்து போட்டிக்கான பயிற்சி பணியையும் கவனிக்க இருக்கிறார். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடர் குறித்து இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கூறியதாவது, இது கடினமான தொடராக இருக்கும் என்பது தெரியும். இந்தியா சிறந்த அணி. ஆனால் நாங்கள் அனைவரும் விரும்பக்கூடிய கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். உலகின் வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இங்கிலாந்து அணியால் இதை செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை