இந்தியாவுக்கு எதிரான முதல் டி20: விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து

  தினத்தந்தி
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20: விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து

கொல்கத்தா,இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.அதன்படி இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக நாளைய போட்டியில் விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியில் தொடக்க வீரர்களாக பென் டக்கட் மற்றும் பில் சால்ட் களம் இறங்குகின்றனர். அதனை தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஜாஸ் பட்லர், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தொடர்ந்து ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன் களம் இறங்குகின்றனர். இதையடுத்து ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட் இடம் பிடித்துள்ளனர். இந்த போட்டியில் இங்கிலாந்து விக்கெட் கீப்பராக பில் சால்ட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்து விளையாடும் அணி விவரம்: பென் டக்கட், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜாஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.Firepower with bat and ball Brendon McCullum has named the first white-ball team of his reign for tomorrow's opening IT20 v India pic.twitter.com/DSFdaWVPrB

மூலக்கதை