கன்னியாகுமரி: மலையில் பற்றி எரிந்த தீ - தேசிய நெடுஞ்சாலை அருகே பரபரப்பு
கன்னியாகுமரி,கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தோட்டியோடு பகுதியில் உள்ள மலையில் உள்ள காட்டு மரங்கள் இன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. மலை உச்சி வரை தீ மளமளவென பரவியதால் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மலையில் ஆடு, மாடு மேய்க்க செல்பவர்கள் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.