தனுஷும் நாகார்ஜுனாவும் அண்ணன்-தம்பி போல பழகினார்கள் - இயக்குனர் சேகர் கம்முலா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். சமீபத்தில் வெளியான 'ராயன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்துள்ளார். மேலும் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்திலும் நடித்து வருகிறார். 'குபேரா' படம் தனுஷின் 51-வது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சேகர் கம்முலா. இவர் அனாமிகா, லவ் ஸ்டோரி என பல படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்போது இவர் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகியோரின் நடிப்பில் 'குபேரா' எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது, ஹைதராபாத்தில், தனுஷின் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷ் மற்றும் நாகார்ஜுனா குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, "தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகிய இருவரும் ஸ்டார் நடிகர்கள். அவர்கள் உச்சத்தில் இருந்தாலும் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்கள். அவர்களுக்கு இடையில் சீனியர், ஜூனியர் என்ற வித்தியாசம் இருக்காது. படப்பிடிப்பு தளத்தில் அவர்களைப் பார்ப்பவர்கள் இரண்டு பேரையும் பெரிய ஸ்டார்கள் என்று சொல்லவே மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் அண்ணன்- தம்பி மாதிரி பழகினார்கள். இருவருக்கும் இடையில் அருமையான நட்பும் ஆழமான அன்பும் இருக்கிறது.'குபேரா' படத்தின் கதையை எழுதி முடித்ததும் இதற்கு சரியான நடிகராக தனுஷ் இருப்பார் என நினைத்து முதலில் அவரை அணுக திட்டமிட்டேன். ஆனால், இதற்கு முன் இருவருக்கும் எந்த பழக்கமும் தொடர்பும் இல்லாததால் எனக்கு தயக்கம் இருந்தது. பின், செல்போன் வழியாகத் தொடர்புகொண்டு என்னை அறிமுகப்படுத்தியதும், தனுஷ் என் முந்தைய படங்கள் குறித்து பேச ஆரம்பித்துவிட்டார். உண்மையில், அது எனக்கு பெரிய வியப்பாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.