டெல்லியில், கடந்த 56 நாட்களில் குளிருக்கு 474 பேர் பலி

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் குளிர்காலம் மிகவும் கொடியதாக இருக்கும். இங்கு கடந்த 56 நாட்களில் 474 பேர் குளிரால் இறந்ததாக ஒரு தொண்டு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளது. சாலையோரம் தங்கியவர்களுக்கு கம்பளி போர்வைகள், சூடான தண்ணீர், மறைக்கப்பட்ட தங்குமிடங்கள் இல்லாததால் இந்த உயிர்ப்பலிகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருக்கிறது. டெல்லி அரசு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
மூலக்கதை
