ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி
சென்னை,13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதியது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 1-3 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சிடம் தோல்வி அடைந்தது. சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் கேரளா வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். முரட்டுத்தனமான ஆட்டம் காரணமாக வில்மர் ஜோர்டான் கில் 37-வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டது சென்னை அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இது நடப்பு சீசனில் சென்னை அணி சந்தித்த 9-வது தோல்வியாகும்.மும்பையில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. - ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணிகள் மோதுகின்றன.